×

ரிச்சா ரகசிய காதல் திருமணம்

தமிழில் தனுஷ் ஜோடியாக மயக்கம் என்ன, சிம்பு ஜோடியாக ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்தவர், ரிச்சா கங்கோபாத்யாய. தெலுங்கு மற்றும் பெங்காலி படத்திலும் நடித்துள்ள அவர், தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ  படித்தார். அப்போது தன்னுடன் படித்த ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்தார்.

இதையடுத்து இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டு திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அதன்படி அவர்கள்  திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ மத முறைப்படி நேற்று முன்தினம் ரகசியமாக நடந்தது. இதில் இருவீட்டு உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

Tags : Richa Secret Love Marriage ,
× RELATED அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” !!